ரஜினி, ஷங்கர் சாதனையை உடைத்தது ‘புலி’.

ரஜினி, ஷங்கர் சாதனையை உடைத்தது ‘புலி’.
pulivijay
இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே ‘புலி’ திரைப்படத்திற்கு மிக அதிக அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது என்பது இந்த படத்தை ரிலீஸ் செய்ய உலக அளவில் திரையரங்கு உரிமையாளர்கள் போட்டி போடுவதில் இருந்தே தெரியவருகிறது. இந்நிலையில் ‘புலி’ திரைப்படம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் புதிய சாதனை செய்து வருகிறது.

ஷங்கர்-விக்ரம் இணைந்த பிரமாண்ட திரைப்படமான் ‘ஐ’ திரைப்படம் பிரிட்டனில் 57 திரையரங்குகளிலும், அமெரிகாவில் 157 திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆனது. இந்த இந்த சாதனையை ‘புலி’ திரைப்படம் உடைத்துவிட்டது. பிரிட்டனில் ‘புலி’ திரைப்படம் 58 திரையரங்குகளிலும், அமெரிக்காவில் 160க்கும் அதிகமான திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது.

இதேபோல் கனடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் 16 திரையரங்குகளில் வெளியானது. கனடாவில் ஒரு தமிழ்ப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியானது இதுவே முதல்முறை. ஆனால் இந்த சாதனையையும் ‘புலி’ மிஞ்சிவிட்டது. கனடாவில் ‘புலி’ திரைப்படத்திற்கு இதுவரிஅ 18 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஷங்கர், ரஜினி சாதனையை ‘புலி’ உடைத்துவிட்டதால் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் தயாராகிவிட்டார் என்றே கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply