கருணாநிதி திரைக்கதை எழுதிய படத்தை தயாரித்தவரிடம் இருந்து ரூ.100 கோடி பறிமுதல். பெரும் பரபரப்பு

கருணாநிதி திரைக்கதை எழுதிய படத்தை தயாரித்தவரிடம் இருந்து ரூ.100 கோடி பறிமுதல். பெரும் பரபரப்பு
martin
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி இருந்த காலத்தில் லாட்டரி விற்பனையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்ட மார்ட்டின், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டவுடன் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தனது தொழிலை செய்து வந்தார். இந்நிலையில் மார்ட்டினின் மேற்குவங்க அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை செய்த அம்மாநில அதிகாரிகள், கணக்கில் வராத ரூ.100 கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் நேற்று திடீரென வருவாய்த்துறையும், அமலாக்கத்துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இவர்களுக்கு போலீசார் போதிய பாதுகாப்பு அளித்தனர். இந்த சோடஹ்னையில் மேற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 54 கோடி ரூபாயும், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 21 கோடியும்,  சிலிகுரியில் உள்ள மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் இருந்து 29 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 104  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பணம் முழுவதும் அடுத்த மாதம் பீகாரில் நடைபெறவுள்ள தேர்தலில் செலவு செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாட்டரி சாம்ராஜ்யம்  நடத்தும் மார்ட்டின்,  கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை எழுதிய இரு படங்களை  தயாரித்தார். லாட்டரி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக, இவர் மீது கேரளாவில் மட்டும் 32 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இதில் 7 வழக்குகளில் சி.பி.ஐ இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. லாட்டரி  தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக  8 மாதங்கள் இவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply