‘துக்ளக்’ ஆசிரியர் சோ சென்னை மருத்துவமனையில் கவலைக்கிடம்

‘துக்ளக்’ ஆசிரியர் சோ சென்னை மருத்துவமனையில் கவலைக்கிடம்
cho hospital
பாரத பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்களின் நெருங்கிய நண்பரும் ‘துக்ளக்’ ஆசிரியருமான சோ ராமசாமி கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ ராமசாமி, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோ, தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது.

Leave a Reply