சென்னை மாயாஜாலில் ‘புலி’யின் அடுத்த சாதனை.

சென்னை மாயாஜாலில் ‘புலி’யின் அடுத்த சாதனை.
mayajaal
இளையதளபதி விஜய்யின் ‘புலி’ திரைப்படம் குறித்து ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை புதுப்புது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நேற்று முன் தினம் இந்த படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி ஒருசில மணி நேரங்களில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்த நிலையில், தற்போது சென்னையின் மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டரான மாயாஜாலில் தினமும் 63 காட்சிகளுக்கு புக்கிங் நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. ரஜினியின் கோச்சடையான் மாயாஜாலில் 100 காட்சிகள் திரையிடப்படன. ரஜினிக்கு அடுத்தபடியாக மிக அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் திரைப்படம் ‘புலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் உள்ள மற்றொரு முக்கிய திரையரங்கு காசி. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் இந்த தியேட்டரில்தான் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விருப்பம் கொள்வதுண்டு. அந்த வகையில் காசி தியேட்டரில் ‘புலி’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கும் 5.30 மணிக்கும் காட்சிகள் திரையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு காவல்துறையினர்களிடம் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘புலி’ படம் ரிலீஸாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டே இருக்கின்றது. தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களிலும் ‘புலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply