‘”கெத்த விடாத உன் கெத்த விடாத”. வேதாளம் படத்தின் பாடல் வரிகள் லீக்?
அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புல் தர லோக்கல் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த பாடலில் அஜீத், செம டான்ஸ் ஆடியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தர லோக்கல் பாடலுக்கு புகழ்பெற்ற அனிருத், வேதாளம் படத்திற்காக கம்போஸ் செய்த ‘”கெத்த விடாத உன் கெத்த விடாத” என்ற கெத்து பாடல் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 30 வினாடி வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த கெத்து பாடல் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ பாடலுக்கு இணையாக இருக்கும் என்று இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அமைத்த ஷோபி மாஸ்டர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
மேலும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் வரும் அக்டோபர் 16ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளின்போது வெளியாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்தாஸ், ராகுல்தேவ், சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேதாளம்’ படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.