சவுதி இளவரசர் அமெரிக்காவில் திடீர் கைது. பெரும் பரபரப்பு
சவுதி நாட்டு இளவரசர் தன்னிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக வந்த குற்றச்சாட்டினை அடுத்து அமெரிக்க போலீஸார் அவரை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவுதி மன்னருக்கு சொந்தமான அரண்மனை ஒன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ளது. சவுதி மன்னர் குடும்பத்தினர் அமெரிக்கா வரும்போது இந்த அரண்மனையில் தங்குவது வழக்கம். சுமார் 240 கோடி மதிப்புள்ள இந்த அரண்மனை சுமார் 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்டது
இந்த அரண்மனையில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் அமெரிக்க போலீசாரிடம் தன்னை சவுதி இளவரசர் தகாத உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் கூறிய புகாரை அடுத்து சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது இயற்கை நியதிக்கு மாறான வகையில் பெண்ணை உறவுக்கு வற்புறுத்திய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு அமெரிக்க போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 2 லட்சம் பவுண்டுகள் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வழக்கு வரும் அக்டோபர் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் இளவரசர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.