செல்பியினால் ஏற்படும் மரணங்கள். ஒரு அதிர்ச்சி சர்வே
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தற்போது விரும்புவது செல்பியைத்தான். செல்பி எடுக்காதவர்களே இல்லை என்று எண்ணும் அளவுக்கு செல்பி மிக வேகமாக பிரபலம் ஆகிவருகிறது. ஆனால் அதே நேரத்தில் செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஒரு வருடத்தில் சுறாவினால் மரணம் அடையும் எண்ணிக்கையை விட செல்பியினால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் செல்பியினால் மரணம் அடைவது சுற்றுலாப் பயணிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா தளங்களில் ஆர்வக்கோளாறினால் ஆபத்தான் இடங்களில் தகுந்த பாதுகாப்பின்றி செல்பி எடுப்பதால்தான் பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த சர்வே தெளிவாக கூறுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் செல்பியை தவிர்க்கும்படியும் அப்படியே செல்பி எடுப்பதாக இருந்தாலும் ஆபத்தில்லாத இடத்தில் எடுக்கும்படியும் இந்த சர்வேயை எடுத்த தனியார் நிறுவன குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சராசரி உலகம் முழுவதும் சுறாவின் மரணம் அடைவோரின் எண்ணிக்கை எட்டு என்றும் ஆனால் செல்பியினால் மரணம் அடையும் எண்ணிக்கை 12 என்றும் அந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் பலர் ஓடும் ரயிலில் செல்பி எடுப்பதால் அதிகளவு மரணம் ஏற்படுவதாகவும் இந்த சர்வே மேலும் கூறியுள்ளது.