வாசுதேவ மைந்தன் ஸ்ரீ வசுதேவக் கிருஷ்ணனின் ஆன்மீக கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து கிருஷ்ணனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
* கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய( ஓம் என்பது ஒரே எழுத்து)
* கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?
குருக்ஷேத்திரம்.
* பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி
பத்தாவது அத்தியாயம்.
* எட்டு ராணிகளுடன் (அஷ்ட மகரிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்
துவாரகை.
* எல்லா உறவு நிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்
பாரதியார்.
* கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்
நாராயண தீர்த்தர்.
* மன்னார்குடியில் பசு மேய்த்த கோலத்தில் இருப்பவர்
ராஜகோபாலன்.
* கிருஷ்ணாவதாரம் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் எப்படிப்பட்ட அவதாரம்?
முழுமையான (பூர்ண) அவதாரம்.
* கிருஷ்ணர் நாரதருக்கு என்ன இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?
வீணை இசைக்க
* கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்
மதுரா.