‘புலி’ ஸ்டில் போட்டோகிராபருக்கு விஜய் வாங்கிக்கொடுத்த ரூ. 5லட்சம் மதிப்புள்ள கேமிரா
விஜய் நடித்த புலி’ திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் புலி’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு இக்கட்டான நிலையும், அந்த சமயத்தில் விஜய்யின் சாதுர்யமான முடிவு குறித்தும் படக்குழுவினர் பெருமையாக பேசி வருகின்றனர்.
ஆந்திராவில் ‘புலி’ படப்பிடிப்பு நடந்தபோது அந்த படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய ஒருவரின் விலைமதிப்புள்ள வெளிநாட்டு ஸ்டில் கேமரா திருடு போய்விட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த கேமராமேன் அழுது புலம்பியதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸை வரவழைக்க படக்குழுவினர் முடிவு செய்தபோது, விஜய் அதை தடுத்து தன்னுடைய செலவிலேயே ஒரு புதிய கேமரா வாங்கித்தருவதாக கூறினார். உடனடியாக தன்னுடைய உதவியாளர் ஒருவரை அழைத்து ஸ்டில் கேமிராமேனையும் உடன் அழைத்து செல்லுமாறும், அவர் விரும்பும் புதிய கேமராவை அவருக்கு வாங்கிக்கொடுக்குமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. கேமிராவை தொலைத்த அந்த கேமிராமேனுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கேமிராவை விஜய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின் இரக்க குணத்தை அந்த நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் தன்னுடைய உதவி பப்ளிசிட்டி ஆகாமல் பார்த்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.