செவ்வாய் கிரகத்தில் தண்ணீர். நாசா உறுதிப்படுத்தியது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர். நாசா உறுதிப்படுத்தியது.
[carousel ids=”72599,72600,72601,72602,72603″] செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் நடத்தி வரும் நிலையில், தற்போது அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் ‘நாசா’ உறுதிப்படுத்தியுள்ளது. எனவே மனிதர்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியான கிரகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை குறித்து தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வரும் அமெரிக்கா அந்த கிரகத்திற்குஏற்கனவே பல விண்கலங்கள் அனுப்பி மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிவங்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது நாசாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக நேற்று தெரிவித்தனர்.

அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் முக்கிய ஆதாரம் ஆகும். செவ்வாயில் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்து இருப்பதால், அடுத்த கட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது பற்றிய ஆய்வில் மும்முரமாக ஈடுபட உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply