விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு. திட்டமிட்டபடி ‘புலி’ வருமா?

விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு. திட்டமிட்டபடி ‘புலி’ வருமா?raid

விஜய் நடிப்பில் அவரது உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்த வந்த பிரமாண்டமான திரைப்படமான ‘புலி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இன்று விஜய் உள்பட புலி படக்குழுவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரபல கோலிவுட் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ‘புலி’ திரைப்படம் ரூ.125 கோடியில் தயாரிக்கபட்டுள்ளதாகவும், விஜய்தான் இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் என்றும் வெளிவந்த தகவலை அடுத்தே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், மேலும் கணக்கில் வராத பணத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் வீடு, அவரது அலுவலகம், நடிகைகள் நயந்தாரா, சமந்தா, இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம்,தயாரிப்பாளர்கள் எஸ்.தாணும், மதுரை அன்பு,. செல்வகுமார் மற்றும் புலி படத்தின் குழுவினர் இல்லங்கள், அலுவலகங்கள் என மொத்தமாக 25 இடங்களிலும், இவர்களுக்கு சொந்தமான மதுரை, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள இவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும்  ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் முடிவை அறிய அனைத்து ஊடகங்களும் காத்திருக்கின்றன.

Leave a Reply