கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் 70 வயது மாமனாரின் இரண்டாவது திருமணம்
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்று தமிழகத்தின் பெருமையை உலகிற்கே பறைசாற்றினார். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் 70 வயது மாமனார் மறுமணம் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சையின் மாமனார் ஓலாராம் ஹர்யானி மும்பையில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்த ஓலாராம் தற்போது 65 வயது மாதுரி சர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த மாதுரி சர்மாவின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும் போது மரணமடைந்தவர் என்றும் இவர்களது திருமணம் ஆர்ய சமாஜ முறைப்படி நேற்று கோட்டா நகரில் எளிய முறையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஓலராம் ஹர்யானிக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மகளின் பெயர் அஞ்சலி. இவர்தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் மனைவி. இவர்கள் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர். அதுபோல் ஓலாராமின் மகனும் வெளிநாட்டில்தான் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓலாராம், ”ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உரிமை உண்டு” என்றார்.