ஐபோனுக்காக பிசியான சாலையில் நிர்வாணமாக நின்ற 19 வயது இளம்பெண்

ஐபோனுக்காக பிசியான சாலையில் நிர்வாணமாக நின்ற 19 வயது இளம்பெண்
chinese girl
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் ஐபோன் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். ஆனால் காதலன் ஐபோன் வாங்கி தராததால் பிசியான சாலை ஒன்றில் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் உள்ள நான்ஜிங் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் பிசியான மார்க்கெட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது தனக்கு ஐபோன் 6 எஸ் வாங்கித் தருமாறு தனது காதலரிடம் பெண் ஆனால் அவரது காதலன் தற்போது தன்னிடம் பணம் இல்லாததால் வாங்கித்தர முடியாது என்றும் சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த காதலி, ஏன் வாங்கித் தரமுடியாது? என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவர்களின் சண்டை முற்றிக்கொண்டே இருந்த நிலையில், அந்த பெண் திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை  கழட்டி எறிந்துவிட்டு, நிர்வாணமாக நின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் உடையை எடுத்து அணிந்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற வயதான பெண்மணி ஒருவர் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்துகிடந்த ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அவருடைய அறிவுரையை அடுத்து சாமாதானம் அடைந்த அந்தப் பெண் உடைகளை அணிந்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=zyx24912HO8

Leave a Reply