மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு. 5 பேர்களுக்கு மரண தண்டனை

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு. 5 பேர்களுக்கு மரண தண்டனை
mumbai
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறப்பட்ட 12 பேர்களில் ஐந்து பேர்களுக்கு மரண தண்டனை அளித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து நீதிமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு 7 மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 188 பேர் பலியாகினர். இந்த வழக்கின் விசாரணை கடந்த  9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

12 குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனையும்  4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில் இன்றைய தீர்ப்பில் ஐந்து பேர்களுக்கும் மட்டுமே மரண தண்டனை என அரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து மும்பையில் பதட்டம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

மற்ற குற்றவாளிகளின் தீர்ப்பு குறித்த தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Leave a Reply