‘புலி’ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் யார்? வருமான வரித்துறை சோதனையில் திடுக்கிடும் தகவல்
விஜய் நடித்த ‘புலி’ படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் இன்று விஜய், சிம்புதேவன், பி.டி.செல்வகுமார் மற்றும் ‘புலி’ பட விநியோகிஸ்தர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனைக்கு முக்கிய காரணமே, ஒருசில லட்சங்கள் மட்டும் சம்பளமாக பெற்று வரும் PRO எப்படி ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து ஒரு படத்தை தயாரிக்க முடியும்? என்பதுதானாம். எனவே இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளராக வேறு யாராவது இருக்கலாம் என்றும், அதை கண்டுபிடிக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
இன்று இரவுக்குள் ‘புலி’ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் யார்? என்பது தெரியவரும் என்றும், அதன்பின்னர் வருமான வரித்துறையினர் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை அதிரடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சோதனையால் நாளை வெளியாகவுள்ள ‘புலி’ படத்திற்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.