இந்திய வரலாற்றில் முதல்முறையாக நீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு

இந்திய வரலாற்றில் முதல்முறையாக நீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு
court
மதுரை வழக்கறிஞர்கள் மீதான அவதூறு வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த வழக்கின் நேற்றைய விசாரணை முதன்முதலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மதுரை வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் தர்மராஜ் ஆஜரானார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பல்வேறு புகைப்படங்களை தர்மராஜிடம் காட்டி, நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது அதற்கு பதில் கூறிய வழக்கறிஞர் தர்மராஜ், சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிக்கவில்லை என கூறினார். இதனையடுத்து வழக்கறிஞர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தர்மராஜூக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நீதிமன்ற விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக காணொலியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரடி ஒளிபரப்பை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்தனர். நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் ஒரு வழக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது இந்திய அளவிலும், உயர் நீதிமன்ற வரலாற்றிலும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரடி ஒளிபரப்பை அனைவரும் வரவேற்றனர்.

Leave a Reply