வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும். மெக்சிகோ அதிகாரி பேச்சால் பரபரப்பு

வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும். மெக்சிகோ அதிகாரி பேச்சால் பரபரப்பு

mexicoமெக்சிகோ நாட்டில் வீடில்லாமல் பிளாட்பாரத்தில் வாழும் சில மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர்களை  சிகிச்சை செய்ய அழைத்து செல்வதாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் முக்கியச் சாலையின் நடுவில் அடிபட்டுச் சாவதற்காக விடப்படுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்கான ஆணையத்தின் தலைவராக் இருக்கும் ஒல்கா கித்தேரேஸ் மாக்கோரோ என்ற பெண்மணி,  வீடில்லாமல் பைத்தியமாக இருப்பவர்களை விஷ ஊசி போட்டு கொன்றுவிடலாம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒல்கா கித்தேரேஸ் மாக்கோரோ அவர்களின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக அனைத்து தரப்பில் இருந்தும் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து தனது பேச்சுக்கு ஒல்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்

Leave a Reply