மகாத்மா காந்தியுடன் மோடியை ஒப்பிடுவதா? காங்கிரஸ் கண்டனம்
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை இன்றைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியோடு ஒப்பிட்டு பா.ஜ.க. எம்.பி. கோயல் என்பவர் வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயல் எம்.பிக்கு சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆர்வக்கோளாறு காரணமாக பா.ஜ.க. எம்.பி. கோயல் தனது வீட்டின் வெளியே காந்தியையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு ப்ளக்ஸ் பேனர் ஒன்றினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த பேனரில் ”பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த ஒரு துறவி. மகாத்மா காந்தி என்ன சொன்னோரோ, அதையே பிரதமர் மோடி செய்திருக்கிறார். அதைதான் நான் சொன்னேன். தற்போதும், பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை வெற்றியுடன் முடித்து விட்டு திரும்பியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
பா.ஜ.க. எம்.பி. வைத்துள்ள இந்த பேனருக்கு காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், காந்தியை பா.ஜ.க. இழிவுபடுத்தியுள்ளதாகவும், இந்த செயலுக்கு கோயல் எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.