‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி?
விஜய் நடித்த ‘புலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘கத்தி’ தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவியின் 150வது படமாக விளங்கும் இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் வசனங்களும், காட்சிகளும் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு சிரஞ்சீவி பொருத்தமாக இருப்பார் என்றே கூறப்படுகிறதூ.
எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு மாஸ் படத்தில் சிரஞ்சீவி ரீ-எண்ட்ரி செய்யவிருப்பதாகவும், இந்த படம் தெலுங்கில் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
வி.வி. விநாயக் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் டோலிவுட் திரையுலகில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.