சிரியா அகதிகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவலா? அமெரிக்க அதிபர் வேட்பாளரின் சந்தேகம்
சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ள அகதிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் நியூடோனால்டு ட்ரம்ப் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “சிரியாவிலிருந்து தஞ்சம்புக மற்ற நாடுகளுக்குள் நுழைந்துள்ள 2 லட்சம் பேரும், ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருக்கலாம் என தான் சந்தேகம் கொள்வதாகவும், சிரியாவிலிருந்து அகதிகளாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் திரும்பிப்போவார்கள் என்றும், ஏனெனில், அவர்கள் அனைவரும், ஐ.எஸ். படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், உலகின் மிக மோசமான தந்திரமாக அவர்கள் நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக தான் அஞ்சுவதாகவும் கூறினார்.
அத்துடன் சிரியாவுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் படையிரை தான் ஆதரிப்பதாகவும் டோனால்டு தெரிவித்தார். ரஷ்யப் படை ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தாக்குவதற்கு பதிலாக, சிரியா மக்கள் வசிக்கும் பகுதிகளை வான்படை மூலம் தாக்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ள வேளையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்டு ட்ரம்ப்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.