பொதுவாக தலைவலிக்கு அடிப்படை – கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான். அநாவசிய கோபம் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதோடு, தலைவலியையும் உருவாக்கிவிடும். நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும்போது ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதற்காகவே ‘ரிலாக்ஸ் தெரபி’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத சாதாரண அறையிலேயே ரிலாக்ஸ் செய்யலாம். நல்ல காற்றோட்டம் அவசியம். கட்டில் அல்லது தரையில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவேண்டும். கண்களை இறுக்காமல் லேசாக மூடிக்கொள்ள வேண்டும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்குவார்கள்.
முகமும் இறுக்கமாகும். அப்போது தசைகள் இறுகும். புருவம், தசைகள் இறுகுவதைத் தவிர்த்து ரிலாக்சாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் ரிலாக்ஸ் செய்து எளிது. மனம் சமாதானம் அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்சனைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கும் விடை கொடுக்கலாம்… இதயமும் இதமாகும்!