சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

images (2)

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் தேர்ந்து பயிற்சி பெற விரும்பும் தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016 இல் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்கள் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வு நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது. இதில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

முழு நேர பயிற்சி இடங்கள்: 225; பயிற்சி நேரம்: காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரை

பகுதி நேர பயிற்சி இடங்கள்: 100; பயிற்சி நேரம்:  மாலை 6.30 முதல் 8.30 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு நேரம்: 2 மணி நேரம். வினா கொள்குறி அமைப்பில் அமைந்திருக்கும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கடலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.civilservice coaching.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply