அனைத்து இந்தியர்களுக்கும் பான் எண் கட்டாயம். அருண்ஜெட்லி யோசனை

அனைத்து இந்தியர்களுக்கும் பான் எண் கட்டாயம். அருண்ஜெட்லி யோசனை
arun
இந்தியாவில் கருப்புப்பண நடமாட்டத்தை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் விரைவில் அனைவருக்கும் கட்டாய பான் எண் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, பான் எண் தகவல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் தனது ஃபேஸ்புக்கில் கருப்புப்பணம் புழக்கத்தை தடுக்க 10 விதமான ஆலோசனைகளை கூறியுள்ளார். இவற்றில் பான் எண் அறிவிப்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு மிகவும் தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, பான் எண் தகவல் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்றும் இதன்மூலம்  வங்கிகளில் அதிக அளவு பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ வருமானவரித் துறையினரால் கண்டுபிடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் லட்ச ரூபாய்க்கு மேல் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply