ஒரு பூசணிக்காயின் எடை 816 கிலோ. கலிபோர்னியா விவசாயி சாதனை

ஒரு பூசணிக்காயின் எடை 816 கிலோ. கலிபோர்னியா விவசாயி சாதனை

[carousel ids=”72912,72913,72914″]

சாதாரணமாக ஒரு பூசணிக்காய் 3 முதல் 5 கிலோ வரை இருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 816 கிலோ எடையுள்ள பூசணிக்காய் ஒன்று விளைந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலிபோர்னியாவில் ஒவ்வொரு வருடமும் அறுவடை திருநாளின் போது மிகப்பெரிய பூசணிக்காயை விளைவித்தவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கப்படுவதுண்டு. இதுவரை 100 முதல் 700 கிலோ வரை பூசணிக்காய்களை விளைவித்து விவசாயிகள் சாதனை செய்துள்ள நிலையில், டிம் மாத்தின்சன் என்ற விவசாயி 1800 பவுண்டுகள் அதாவது 816 கிலோ எடையுள்ள பூசணிக்காய் ஒன்றை விளைவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். The Flying Saucer’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பூசணிக்காய் நாட்டின் அதிக எடையுள்ள பூசணிக்காய் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற இதே திருவிழாவில் 718 கிலோ எடையுள்ள பூசணிக்கையை ஒரு விவசாயி விளைவித்ததே இதுவரை சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply