இன்று கொல்கத்தாவில் 3வது டி-20 போட்டி. இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து முதல்கட்டமாக மூன்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது.
முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, சொந்த மண்ணில் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. முதல் ஆட்டத்தில் மோசமான பந்து வீச்சாலும், 2வது ஆட்டத்தில் மோசமான பேட்டிங்காலும் தோல்வி அடைந்த இந்திய அணி, இந்த போட்டியில் தங்களது திறமையை நிரூபிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியை போல சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இன்றைய போட்டியில் அமித் மிஸ்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணி 3வது போட்டியிலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்துடன் உள்ள நிலையில் இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக எவ்வாரு ஈடுகொடுக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.