பதவியேற்றதில் இருந்து இன்னும் ஒரு ஏழையை கூட மோடி சந்திக்கவில்லை. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பதவியேற்றதில் இருந்து இன்னும் ஒரு ஏழையை கூட மோடி சந்திக்கவில்லை. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
rahul gandhi
நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இந்த 16 மாதங்களில் அவர் இன்னும் ஒரு ஏழையை கூட சந்திக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளும், வெளிநாட்டு தொழிலதிபர்களும் மட்டுமே அவரை சந்தித்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்தி நேற்று பீகாரில் உள்ள பெகுசரை மற்றும் ஷேக்பூரா மாவட்டங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் பேசினார். அவர் கூறியதாவது, ”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார்.

இங்கிருக்கும் யாருடைய வங்கி கணக்கிலாவது ரூ.15 லட்சம் போடப்பட்டு உள்ளதா? தயவு செய்து கூறுங்கள். அவர் வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இதுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதவியேற்ற இந்த 16 மாதங்களில் ஒரு ஏழையைகூட சந்திக்கவில்லை. விவசாயிகள், ஏழை தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து மோடிக்கு கவலை இல்லை. வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவருடைய உடைகள் குறித்துதான் மோடிக்கு கவலை.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரோ எப்போதும் வெள்ளை உடையுடன் எளிமையாக இருக்கிறார். இதனால் ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுடன் அவரால் ஒன்றிணைந்து இருக்க முடிகிறது. ஆனால், சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு நிகழ்வுகளில், பலப்பல வண்ணங்களுடன் 16 உடைகளில் மோடி தோன்றியிருக்கிறார். எப்போதும், கார்பரேட் அதிகாரிகள் தான் கோட்–சூட்டில் அவரை சுற்றி இருக்கின்றனர்.

விவசாயிகள், தொழிலாளர்கள் யாராவது கிழிந்த உடையுடன், பிரதமர் அருகே நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கு மட்டும்தான் அறிவு இருப்பதாகவும், ஏழைகளுக்கு அறிவில்லை என்றும் பிரதமர் நினைக்கிறார்”

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மோடி விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply