இந்துக்களின் சவுதி அரேபியாவாக மாறி வருகிறது இந்தியா. தஸ்லிமா நஸ்ரின்

இந்துக்களின் சவுதி அரேபியாவாக மாறி வருகிறது இந்தியா. தஸ்லிமா நஸ்ரின்
taslima
சமீபத்தில் மும்பையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரி நிகழ்ச்சி ஒன்று சிவசேனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்  பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், சவுதி அரேபியா போல இந்தியா மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாடகர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டரில் கூறியபோது, “பாகிஸ்தான் பாடகர் குலாம் நபி ஒன்றும் ஜிகாதி அல்ல. அவர் ஒரு பாடகர்.  ஜிகாதிகளுக்கும் பாடகர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா, இந்து சவுதி அரேபியாவாக மாறிக்கொண்டிருக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே  பாடகர் குலாம் அலி டெல்லியில் இசை கச்சேரி நடத்திக் கொள்ள டெல்லி அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்து  டெல்லி கலாசார அமைச்சர் கபில் மிஸ்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “எல்லையில்லாதது இசை,  குலாமுக்கு மும்பையில் நிகழ்ச்சி நடத்த இடம் தரவில்லை என்றால் டெல்லியில் சிறந்த முறையில் அவர் தனது கச்சேரியை நடத்திக் கொள்ளலாம் ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply