சிம்பு நல்ல பிள்ளை. ஆனாலும் விஷாலை நரி என்று சொல்லி இருக்ககூடாது. வடிவேலு

சிம்பு நல்ல பிள்ளை. ஆனாலும் விஷாலை நரி என்று சொல்லி இருக்ககூடாது. வடிவேலு
simbu
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் அணியின் சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிம்பு, சமீபத்தில் விஷாலை நரி என்று கூறியதற்கு அனைத்து தரப்பில் இருந்து கண்டனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாகரீகமாக பேசவேண்டும் என சிம்புவுக்கு பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்புவின் இந்த பேச்சுக்கு நடிகர் வடிவேலு கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு,சிம்புவுக்கு அறிவுரையும் கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘விஷால் நரி வேலை செய்கிறார் என்று சிம்பு பேசியது தவறு. சிம்பு நல்ல தம்பி. நல்ல பிள்ளை. யாரையும் தவறாக பேசக்கூடாது.

நடிகர் சங்கத் தேர்தலில் சமாதானம் செய்ய முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளது.

கமல் தூண்டிவிடுகிறார் என்று சரத்குமார் அணியினர் சொல்கிறார்கள். யாரும் யாரையும் தூண்டவில்லை. விஷால் அணி நடிகர் சங்க விவகாரத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

உண்மையைக் கண்டுபிடிக்கப் போகும் பாண்டவர் அணி எல்லா கலைஞர்களுக்கும் நல்லது செய்வார்கள். களவு போன நடிகர் சங்கத்தைக் கண்டுபிடிப்போம்” என்று வடிவேலு பேசினார்.

இவ்வாறு வடிவேலு கூறினார்

Leave a Reply