விஷாலுக்கு எதிராக களமிறங்கிய பாலா பட நடிகர்
விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தலில் பிசியாக இருந்தாலும், ‘பாயும் புலி’ படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘மருது’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘குட்டிப்புலி, கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ள ‘மருது’ படத்தில் விஷால், காஜல் அகர்வால், பிந்துமாதவி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பிரபல விநியோகிஸ்தர் ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூது கவ்வும், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களை ரிலீஸ் செய்த ஆர்.கே.சுரேஷ், சமீபத்தில் பாலாவின் தாரை தப்பட்டை படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.