போலீஸிடம் இருந்து தப்பிக்க கடலுக்குள் காரை ஓட்டிய கார்த்திருடன்
[carousel ids=”73132,73131,73130,73129,73128,73127″]
ஆஸ்திரேலியாவில் உள்ள கார்த்திருடன் டொயோட்டா கார் ஒன்றை திருடிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் கடலுக்குள் காரை ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பீச் அருகே சுற்றுலாப் பயணி ஒருவர் காரை நிறுத்திவிட்டு கடற்கரையின் அழகை ரசித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கார்த்திருடன் காரை திருடிக்கொண்டு வேகமாக காரை ஓட்டினான். அப்போது அங்கிருந்த போலீஸ் வாகனம், திருடனை பிடிக்க விரட்டியது.
போலீசார் விரட்டி வந்ததால் என்ன செய்வது என்று புரியாத திருடன், கடல்பக்கம் திடீரென காரை திருப்பி, கடலுக்குள் காரை ஓட்டியுள்ளான். பிறகு அலைகளால் அந்த கார் அடிக்கப்பட்டு கரைக்கு திரும்பியது. கார் திருடனை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலுக்குள் கார் திரும்பியதை 9நியூஸ் என்ற சேனல் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பரப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.