கேமரா, எஸ்.எம்.எஸ் வசதியுடன் ஆப்பிள் நிறுவனத்தின் இ-மோதிரம்.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் இ-வாட்ச் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல், ஆப்பிள் நிறுவனம் இ-மோதிரம் ஒன்றை வெளியிட உள்ளதாகவும், இதுவே உலகின் மிகச்சிறிய கேட்ஜெட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சாதனத்துக்கான காப்புரிமத்தை சமீபத்தில் இந்நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மிகச் சிறிய மோதிரம் போல விரலில் அணிந்துகொள்ளக் கூடிய இந்த சாதனம், கேமரா, எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியுடன் செயல்படும் எனத் தெரிய வந்துள்ளது. ஒலியை உணர்ந்து கொள்ளும் இந்தச் சாதனம், ஒலியை வைத்தே எஸ்.எம்.எஸ் அனுப்பவும், கையில் அணிந்து கொண்டு எழுதும் வார்த்தைகளை, டிஜிட்டலில் நேரடியாக பதிவு செய்யும் எனவும் கூறப்படுகிறது.
கை விரல் மோதிரம் போன்று சிறிய ரக மின்னணு சாதனமாக விளங்கவுள்ள இதில் தொடு-உணர்வுடன் கணினி புராசசர், வயர்லஸ் ட்ரான்சீவர் மற்றும் ரீசார்ஜ் செய்துகொள்ளக் கூடிய பேட்டரி’ உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக சாதனத்துக்கான காப்புரிமத்தை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.