சரத்குமாரை சந்திக்க மறுத்த முதல்வர். நடிகர் சங்க தேர்தலில் திருப்பமா?

சரத்குமாரை சந்திக்க மறுத்த முதல்வர். நடிகர் சங்க தேர்தலில் திருப்பமா?
sarathkumar
நடிகர் சங்க தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமாரை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரத்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், அதிமுக ஆதரவு நடிகர்கள் சரத்குமார் அணியை ஆதரிப்பார்கள் என முதலில் கருதப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை, நடிகர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என கூறிவிட்டதால், சரத்குமார் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடிகை மனோரமா மரணம் அடைந்தபோது, அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த ஜெயலலிதாவை சரத்குமார் சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருடன் மோதல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் சரத்குமாரை, ஜெயலலிதா சந்திக்காமல் சென்றது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply