அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி எதிர்த்து போட்டியிடுவது யார்?
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனுமான ஜெப் புஷ், லூசியானா மாகாண ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால், மற்றும் குடியமர்வு சட்டத் திருத்தம், துப்பாக்கி கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை கடுமையாக விமர்சித்து வரும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்களில் ஒருவர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா சூசகமாக தெரிவித்துள்ளார்.
நேற்று ஒபாமா தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, “டொனால்ட் டிரம்பால் அமெரிக்காவின் அதிபர் ஆக முடியாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு காவிய கால கதாபாத்திரம் என்றும் சூசகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்புடன் நடத்தி வருகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட போவது யார்? என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.