டெல்லிக்குள் வாகனம் நுழைந்தால் ரூ.1,300 கட்டணம். உச்சநீதிமன்றம் அதிரடி
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பு குறைபாடும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிற்து. எனவெ டெல்லிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கைகளை கட்டுப்பட்டுத்த டெல்லிக்குள் நுழையும் வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் வாகன பெருக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, எம்.சி.மேத்தா என்பவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் விசாரணை நேற்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு வந்தது. இந்த விசாரணையில் டெல்லிகுள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்..
டெல்லிக்குள் நுழையும் வணிக வாகனங்கள், சுங்க கட்டணத்துடன், சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் என்ற புதிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் நவம்பர் 1-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 29-ந் தேதிவரை, 4 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அமலில் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிவிக்கையை பிறப்பிக்குமாறு டெல்லி மாநில அரசை கேட்டுக்கொண்டது.
அதன்படி, இலகுரக வாகனங்களுக்கு ரூ.700-ம், மூன்று ஆக்சில் மற்றும் அதற்கு மேல் கொண்ட வாகனங்களுக்கு ரூ.1,300-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.