வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வளர்ச்சிக்கு உதவும். இச்சத்து குறைவாக இருந்தால், முடி வலிமையின்றி இருக்கும். இந்த சத்து சிக்கனில் அதிகம் இருக்கும்.
காப்பர் புதிய ஹீமோகுளோபினை உருவாக்கி, தலையில் ஹீமோகுளோபின் மூலம் ஆக்ஸினை வழங்கி, முடியின் வளர்ச்சிக்கு உதவும். இந்த காப்பர் சத்தானது சோயா, எள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியில் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் முடி ஆரோக்கியத்தை இழந்து உதிரும். எனவே உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க கீரை, சிக்கன், இறைச்சி, முட்டை, மீன், பசலைக்கீரை மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட முடி உதிர்வை தடுக்கலாம்.