என்னென்ன தேவை?
சௌமீனுக்கு…
நூடுல்ஸ் – 2 பாக்கெட்,
வெங்காயம் – 1,
குடை மிளகாய் – 1,
வெங்காயத்தாள் – 1/2 கட்டு,
முட்டைக்கோஸ் – 100 கிராம்,
கேரட் – 2,
பீன்ஸ் – 100 கிராம்,
எண்ணெய் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 6,
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சோயா சாஸ் – 1/4 கப்,
நறுக்கிய லீக்ஸ், செலரி – தலா 1 கைப்பிடி.
வறுத்த நூடுல்ஸுக்கு…
பாதி வேக வைத்த நூடுல்ஸ் – 1 பாக்கெட்,
எண்ணெய் – தேவைக்கு.
புளிப்பு மற்றும் இனிப்பு
கிரேவிக்கு…
கேரட் – 1 கப்,
வெள்ளரிக்காய் – 1 கப்,
குடை மிளகாய் – 1 கப்,
வெங்காயம் – 1 கப்,
வெங்காயத்தாள் – 1 கப் (துண்டாக நறுக்கவும்),
உப்பு – தேவைக்கு,
வெள்ளை வினிகர் – 1/2 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
தக்காளி சாஸ் – 1 கப்,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்.
க்ரிஸ்பிக்கு…
சோள மாவு,
மைதா – தலா 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
பால் – 1/2 கப்,
கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடை மிளகாய் – தலா 1/2 கப்,
இஞ்சி – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 6 (நறுக்கியது),
சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் நூடுல்ஸ் போட்டு வெந்தவுடன் வடித்து, குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தி, சிறிது எண்ணெய் தடவி வைக்கவும். காய்கறிகளை மெல்லியதாக நீளமாக நறுக்கவும். அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துவெங்காயம், பச்சை மிளகாய் ேபாட்டு வதக்கவும். பிறகுநறுக்கிய காய்கறிகள், உப்பு, சோயா சாஸ் கலந்து மூடி மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம்.
நூடுல்ஸை இத்துடன் சேர்க்கவும்.பாதி வேக வைத்த நூடுல்ஸை இறக்கி, குளிர்ந்த நீரில் அலசி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புளிப்பு இனிப்பு கிரேவிக்கான காய்கறிகளை கழுவி, நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி சாஸ்,வினிகர், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
க்ரிஸ்பிக்கான காய்கறிகளுடன் உப்பும் சோயா சாஸும் சேர்த்துப் பிசறி வைக்கவும். தயாராக இருக்கும் மாவில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஒரு தட்டில் ‘செளமீன்’ பரத்தவும். அதன்மேல் புளிப்பு மற்றும் இனிப்பு கிரேவியை ஊற்றவும். பின் வறுத்த க்ரிஸ்பியைப் போடவும். அதன் மேல் வறுத்த பொன்னிற நூடுல்ஸை தூவவும். கடைசியில் தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து மேலே தூவி, கோஸ் துருவலைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.