பீகாரில் தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா? மோடிக்கு லாலு சவால்
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடதது. 243 தொகுதிகள் அடங்கிய பீகார் மாநிலத்தில் நேற்று 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடி விலக தயாரா? என்று மோடிக்கு ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலுக்கு மோடி அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் ”மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 3 மாதங்களாக பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப பெற அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியது. ஆனால், தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக நிச்சயம் இருக்காது. பீகார் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடி விலக தயாரா?” என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
லாலுபிரசாத்தின் சவாலுக்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க. கூட்டணி கட்சி, தங்கள் கூட்டணி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள முடிவுகளில் 90% வெற்றி பெறுவது உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் கருத்துக்கணிப்புகளை வைத்து பார்க்கும்போது பீகாரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றே கூறப்படுகிறது.