இந்திய எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பியளிப்பதை வரவேற்கிறென். சல்மான் ருஷ்டி

இந்திய எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பியளிப்பதை வரவேற்கிறென். சல்மான் ருஷ்டி
salman rushdie
இந்தியாவில் சமீபகாலமாக மதவாத வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஆபத்தானது என்றும் பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.

பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சல்மான் ருஷ்டி, ‘இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நயந்தார சாகல் உள்பட பல எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்து இந்த ஆபத்தை எதிர்ப்பதை நான் ஆதரிக்கிறேன். இந்தியா ஓர் உண்மையான பேராபத்தில் உள்ளது. சாதாரண மக்கள் புத்தகங்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. சாதாரண மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களாக இது உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் மவுனமாக உள்ளது. இந்த விவகாரத்தில் மோடி என்ன பேசப்போகிறார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 1988ஆம் ஆண்டு “த சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் இஸ்லாமியத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டதால், அவரை அப்போதையை ஈரான் தலைவர் அயத்தொல்லா கொமெனி கொலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் சல்மான்ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் அடைந்து தற்போது அங்கேயே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply