இன்று இரவு அஜீத் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி
தல அஜீத் நடித்துள்ள வேதாளம்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் அஜீத் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசரும், போஸ்டர்களும் இணையதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் 16ஆம் தேதி அனிருத்தின் பிறந்த நாளில் ரிலீசாகவுள்ள நிலையில், இன்று இந்த படத்தின் ஒரு பாடலின் டீசர் வெளியாகவுள்ளது
அஜீத் அறிமுகமாகும் தரலோக்கல் பாடலின் டீசர் இன்று வெளிவரவுள்ளதால் இந்த ஆடியோ டீசரை வரவேற்க அஜீத் ரசிகர்கள் வழக்கம்போல தயாராகி வருகின்றனர். இன்று இரவு வெளியாகவிருக்கும் இந்த டீசரும் இணையதளத்தில் ஒரு பெரும் சுனாமியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் அஜீத் ரசிகர்கள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியையும் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், தம்பி ராமையா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.