கருத்து சுதந்திரம் இல்லையென்றால் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கருத்து சுதந்திரம் இல்லையென்றால் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
mahesh
பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலை, மாட்டுக்கறி சாப்பிட்ட இஸ்லாமியர் கொலை ஆகிய மத வன்முறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறி பிரபல எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்து வரும் நிலையில், கருத்துரிமை பாதிக்கப்படுவதாக கருதும் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிடலாம் என மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ”கருத்துரிமை பாதிக்கப்படுவதாகக் கூறி எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் தவறான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இருப்பினும், அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு என்பதால் அரசு அதனை ஏற்றுக் கொள்கிறது.

கருத்துரிமை பாதிக்கப்படுகிறது, இதனால் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கருதினால், எழுதுவதை நிறுத்தி விடலாம்” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிச்ட் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மகேஷ் சர்மா பொறுப்பற்ற முறையில் பேசிவருவதாகவும், அவர் மீது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply