இந்திய அணிக்கு முதல் வெற்றி. 22 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி-20 தொடரையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தையும் வெற்றி கொண்ட இந்திய அணி, நேற்று புத்துணர்ச்சியுடன் இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 3 ரன்களிலும், தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் பின்னர் வந்த ரஹானே மற்றும் தோனி பொறுப்பான ஆட்டத்தை ஆடினர். ரஹானே 51 ரன்களும், தோனி 92 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ரன்கள் எடுத்தது.
248 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 43.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிபிளஸ்ஸிஸ் ரன்களும், டீ காக் 34 ரன்களும், டுமினி 36 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.