‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் கேரக்டர். இதுவரை வெளிவராத தகவல்
அஜீத் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் மற்றும் மற்ற நடிகர்கள் நடித்துள்ள கேரக்டர் குறித்து ஒருசில தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவராகவும் ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராகவும் நடித்துள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, அஜீத் கால் டாக்சி ஓட்டுபவராகவும், அவருக்கு முதலாளியாக சூரி நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் கால்டாக்சி ஏஜன்ஸி ஒன்றை நடத்தும் கேரக்டரில் சூரி நடத்திருப்பதாகவும், அவரிடம் அஜீத் டிரைவராக பணிபுரியும் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இந்த படத்தில் அவருடைய பெயர் கணேஷ் என்றும் கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையே வயிறு வலிக்கும் காமெடி காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அஜித்தின் தந்தையாக தம்பி ராமையா, பார்வை தெரியாத பணக்காரர் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அஜீத்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன், கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், ராகுல்தேவ், கபீர்சிங், தம்பி ராமையா, சூரி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.