பேசிக்கொண்டிருக்கும்போது இணைப்பு கட் ஆனால் இழப்பீடு. டிராய் அதிரடி உத்தரவு

பேசிக்கொண்டிருக்கும்போது இணைப்பு கட் ஆனால் இழப்பீடு. டிராய் அதிரடி உத்தரவு
troy
மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும் திடீரென டவர் இல்லாத காரணத்தாலும், அல்லது வேறு தொழில்நுட்ப காரணத்தாலும் இணைப்பு துண்டிக்கப்பட்ட அனுபவம் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் இணைப்பு துண்டிக்கப்பட்ட அழைப்புகள், ஏற்கப்படாத அழைப்புகளில் இடம்பெறும். இந்த இழப்பீடு நாள் ஒன்றுக்கு 3 முறை தடைப்பட்ட அழைப்புகளுக்கு பெறலாம் என்றும் அதற்கு மேற்பட்ட அழைப்புகள் துண்டிக்கப்படுவதனால் நுகர்வோர்கள் எந்த இழப்பீட்டை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழைப்பு தடைபட்டதற்கான வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறித்து, அழைப்பு தடை ஆன 4 மணிநேரத்துக்குள் நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது யூ.எஸ்.எஸ்.டி மூலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும்
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இழப்பீடு தொகை அவர்களுடைய பில்லில் வரவு வைக்கப்பட்ட வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராயின் இந்த உத்தரவை தொலைத்தொடர்பு அமைச்சர் முதல் சாதாரண குடிமகன் வரை வரவேற்றுள்ளனர். இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply