இந்த மரத்தின் பட்டைச் சூரணத்தை வேளைக்கு 1 ஸ்பூன் சர்க்கரையுடன் கலந்து தினம் 3 வேளை கொடுப்பதுண்டு. அல்லது ஒரு பலம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைபடி தண்ணீர் விட்டு வீசம்படியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 1 அவுன்ஸ்வீதம் தினம் 3 வேளை கொடுப்பதுண்டு.
இவற்றால் அஜீரணபேதி, சீதபேதி குணமாகும். வேங்கைப்பிசினைப் பெரியவர்களுக்கு வேளைக்கு 5-15 குன்றி எடை தினம் 2-3 வேளை கொடுக்க வெள்ளை, சீதபேதி, அதிசாரபேதி குணமாகும். இன்னும் இதனைத் தூளாக்கிக் காயங்களுக்குத் தூவிவர ஆறும்.
வேங்கைப்பிசின் 15 விராகனெடை அபினி 1 விராகனெடை லவங்கப்பட்டைச் சூரணம் 4 விராகனெடை கல்வத்தில் போட்டுமிருதுவாக அரைத்து வைத்துக் கொண்டு வேளைக்கு 3-5 குன்றி எடை தினம் 2-3 வேளை கொடுக்கச் சீதபேதி, ரத்தபேதி, அஜீரண பேதி முதலியவற்றை நீங்கும்.