பீன்ஸ் புலாவ்

432dabca-edeb-4ca8-be2c-558371a40f1e_S_secvpf

தேவையான பொருட்கள்:

வேக வைத்த சாதம் – ஒரு கப்,
பீன்ஸ் – 100 கிராம்,
காய்ந்த திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 4 ,
மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 2,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கிராம்பு – 2,
பிரிஞ்சி இலை – 2,
ஏலக்காய் – 2,
பட்டை – ஒரு துண்டு,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை மொறு மொறுவென்று வறுத்து, எண்ணெயை வடித்து விட்டு தனியாக வைக்கவும்.

• பிறகு எண்ணெயில் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பெருங்காயத்தூள், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து வறுக்கவும்.

• அதனுடன், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

• அதில் பீன்ஸ், வடித்த சாதம், வதக்கிய வெங்காயம் (அலங்கரிக்க சிறிது தனியாக எடுத்து வைக்கவும்), கரம்மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக கிளறவும்.

• கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

Leave a Reply