34 மாதங்களுக்கு பின் சென்னையில் ஒருநாள் போட்டி. ரசிகர்கள் ஆர்வம்

34 மாதங்களுக்கு பின் சென்னையில் ஒருநாள் போட்டி. ரசிகர்கள் ஆர்வம்
cricket1 cricket
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி ராஜ்கோட்டிலும் 4வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்  நடைபெறவுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 34 மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினார்கள். நள்ளிரவில் இருந்ததே ரசிகர்கள் பலர் வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.750 ஆகும். சி,டி மற்றும் இ ஸ்டாண்டின் கீழ்பகுதி வரிசையில் இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் அமரலாம். இந்த டிக்கெட்டை வாங்க தான் பெருமளவில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். டிக்கெட்டுக்கள் விலை ரூ.750, ரூ.1,500, ரூ. 3ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.7,500 என்ற விலைகளில் விற்கப்பட்டன.

Leave a Reply