ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தால் சினிமா உலகத்தில் நுழைந்ததுபோல் இருக்கும்.பிரபு
தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவேறியதை அடுத்து சமீபத்தில் 70வது ஆண்டுவிழா மற்றும் இந்த நிறுவனத்தின் 70வது ஆண்டுவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஏவி.மெய்யப்பன் தமிழில் எழுதிய ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஒரே மேடையில் நடந்தது. இந்த விழாவில் ஏவிஎம் சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், இளையதிலகம் பிரபு, இந்து என்.ராம், பிரபல தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வானவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இளையதிலகம் பிரபு, ‘நான் சிறுவயதில் பலமுறை ஏவிஎம் ஸ்டுடியோவை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளேன். வாசலில் உள்ள ஏவிஎம் உருண்டை பந்து சுழல்வதை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போதே சினிமா என்ற உலகத்திற்குள் நுழைந்ததுபோல் இருக்கும். சிறுவயதில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு எனது தந்தை சிவாஜியுடன் சென்றபோது அங்கு ஒரே நேரத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர்களின் படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதை நான் பார்த்து வியந்துள்ளேன். மேலும் ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு பெரிய உதாரணம் திரு.ஏவிஎம் சரவணன் அவர்கள். அவர், பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மரியாதை கொடுக்கும் உன்னதமான மனிதர்’ என்று பேசினார்.