பாரதிராஜாவின் நாயகிகள் தமிழர்களா? இணையத்தில் காரசாரமான விவாதங்கள்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, ‘நடிகர் சங்கத்தின் நிர்வாகம், தலைமை ஆகியவைகளில் தமிழர் மட்டுமே வரவேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து காரசாரமாக தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய பெரும்பாலான நடிகைகள் வேறுமொழி பேசும் நடிகைகள்தான். தமிழ், தமிழர் என பேசும் பாரதிராஜா, ஏன் தமிழ் நடிகைகளை அதிகம் அறிமுகப்படுத்தவில்லை என்றும், பாரதிராஜாவின் மருமகளே ஒரு மலையாளி என்றும் கேள்விக்கணைகள் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நாயகிகள் ஸ்ரீதேவி (தெலுங்கு), ரதி (இந்தி), விஜயசாந்தி (தெலுங்கு), ராதா (மலையாளம்), மாதவி (தெலுங்கு), ரேவதி (மலையாளம்), ரேகா (மலையாளம்), அமலா (பெங்காலி), ரஞ்சிதா (தெலுங்கு), ரியாசென் (பெங்காலி), சிந்து மேனன் (மலையாளம்), காஜல் அகர்வால் (இந்தி), கார்த்திகா (மலையாளம்). இவ்வாறு தனது படங்களில் மற்ற மொழி பேசும் நடிகைகளை அறிமுகப்படுத்திவிட்டு, தமிழ் குறித்து பேச அவருக்கு அருகதை இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.