நேபாள நாடாளுமன்றத்தின் முதல் பெண் தலைவர் தேர்வு

நேபாள நாடாளுமன்றத்தின் முதல் பெண் தலைவர் தேர்வு
nepal
நேபாள நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்பட்டார். நேபாள நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அன்சாரி கர்தி மகர் என்ற பெண், நாடாளுமன்றத்தின் தலைவராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான அன்சாரி கர்தி மகர் நாடாளுமன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற துணைத் தலைவராகவும் கங்கா பிரசாத் யாதவ் என்ற பெண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது ஆச்சரியத்தை வரவழைக்கும் ஒரு செய்தி.

முன்னதாக நாடாளுமன்றத்தின் தலைவர் பதவிக்கு அன்சாரி கர்தி மகர் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட நேபாள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சியின் வேட்பாளர் அனுராதா தபா மகர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply