ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதி. சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து.

ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதி. சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து.
karunanidhi
கடந்த வருடம் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக மாறியது. இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சியில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதி என்ற இடத்திஅ தேர்வு செய்தார். இதற்கான அடிக்க்ல நாட்டு விழா வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தாங்கள் முதல், முதலமைச்சராகி இருக்கும் புதிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தலைநகராகும் அமராவதி நகரின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தாங்கள் அனுப்பிய அழைப்பிதழ் கிடைக்க பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அது தங்களின் கனவு நகரமாக உருவாக உள்ளது. உங்களின் கனவுகள் மிகவும் சிறப்புமிக்க திறன் கொண்டவை. அமராவதி நகரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை படைக்கும்.

அனைத்து தகுதி உடைய இந்நகரத்தை பிரதமர் நரேந்திர மோடி 22ஆந் தேதி அடிக்கல் நாட்ட இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த விழா வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் ஆந்திர பிரதேச மக்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேற்றம் அடைவார்கள்” என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply